Thursday, 5 January 2017

BLUE FLOWER JUICE

நீல நிற சங்கு புஷ்பம் உண்ணக் கூடிய, பல அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட பூ வகைகளில் ஒன்றாகும். சிறுநீரக கோளாறுகளை சரி செய்ய உதவும். கண் பார்வை கூர்மை அடையவும் கண் நோய்களை குணமாக்கவும் உதவும்.உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கும். மற்றும் தேவையான பல வைட்டமின்கள் மினரல்கள் கொண்டது.
ஜில்லென்ற சங்கு புஷ்பம் தேநீர்! 10 சங்கு புஷ்பங்களை கழுவி அதன் காம்பருகில் உள்ள பச்சை நிற பகுதியை நீக்கி விடவும். பூக்களை மட்டும் ஒரு பாத்திரத்தில் இட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். தண்ணீர் நீல நிறமாக மாறி விடும். நீலத்தேநீரை வடி கட்டி அதில் 1/2 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். நீலத்தேநீர் அற்புதமான அழகிய ஊதா நிறமாக மாறி விடும் அற்புதம் பாருங்கள். ஃரிட்ஜில் 2-3 மணி நேரம் வரை குளிர வைக்கவும். ருசிக்கு தேவையான தேன் சேர்த்து குடித்து பயன் பெறுங்கள். சூடாகவும் அருந்தலாம். ருசித்துப்பாருங்கள்.

No comments:

Post a Comment