குக்கரில் 4 நன்கு பழுத்த முழு தக்காளி, 2 பூண்டு, அரை பெரிய வெங்காயம் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் மைய்யாக அரைத்துக் கொள்ளவும். அரை டம்ளர் அளவுக்கு கெட்டியான தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும்.
பன்னீரை (200 கி) மிகவும் பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீர், வெங்காயம் சேர்த்து வதக்கவும். சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள்( அனைத்தையும் தலா கால் ஸ்பூன்) சேர்த்து உப்பு போட்டு பிரட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீர், வெங்காயம் சேர்த்து வதக்கவும். சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள்( அனைத்தையும் தலா கால் ஸ்பூன்) சேர்த்து உப்பு போட்டு பிரட்டிக் கொள்ளவும்.
தனியாக இன்னொரு வாணலியில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி கஸ்தூரி மேத்தி ஒரு ஸ்பூன் ( கைவசம் இருந்தால்) , அரை ஸ்பூன் சீரகம், தக்காளி விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அதில்
மிளகாய்த்தூள் அரை ஸ்பூன், மல்லித்தூள் கால் ஸ்பூன் போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி கொதிக்க விடவும்.. வற்றியதும் தேங்காய்ப்பால் ஊற்றி வற்றி வரும்போது பன்னீர் கலவையை சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.
மிளகாய்த்தூள் அரை ஸ்பூன், மல்லித்தூள் கால் ஸ்பூன் போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி கொதிக்க விடவும்.. வற்றியதும் தேங்காய்ப்பால் ஊற்றி வற்றி வரும்போது பன்னீர் கலவையை சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.
கைப்பிடி கொத்தமல்லி தூவி இறக்கவும்..
அப்படியே சாப்பிடலாம் அல்லது மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி சட்னியாகவும் , தனியாகவும் சாப்பிடலாம்.. இவ்வாறு சட்னி செய்து கொண்டால் காளிப்பிளவர் சாதத்திற்கு பிரட்டிக் கொள்ளலாம், பேலியோ தோசை, ஆம்லெட்டிற்கு
தொட்டுக் கொள்ளலாம். பிற பேலியோ காய்கறிகளை அளவாக எடுத்து நறுக்கி வெண்ணெய்யில் வதக்கி இதில் கலந்தும் சாப்பிடலாம்.
தொட்டுக் கொள்ளலாம். பிற பேலியோ காய்கறிகளை அளவாக எடுத்து நறுக்கி வெண்ணெய்யில் வதக்கி இதில் கலந்தும் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment