Monday 21 November 2016

veg platter


1) முட்டைக்கோஸ் தேங்காய் சாதம் - கோஸை சுத்தம் செய்து சுடு தண்ணீரில் முக்கி எடுத்து மிக்ஸியில் அரிசி சாதம் போல் ஒரு சுத்து சுத்தி வெண்ணெய்யில் வதக்கி கொள்ளவும்.. பின் தேங்காய் சாதம் செய்வதற்கு தயார் செய்வது போல் செய்து அதில் முட்டைக்கோஸை பிரட்டிக் கொள்ளவும்.

2) பிரக்கோலி , காளிஃபிளவர் மசாலா - இரண்டு பூவையும் உப்பு கலந்த சுடுத்தண்ணீரில் போட்டு வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், சுத்தம் செய்த காய்கறி, உப்பு, மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வேக வைத்து பிரட்டிக் கொள்ளவும்

3) வெண்டைக்காய் ரோஸ்ட் - நீள வாக்கில் கீரல் போட்ட முழு வெண்டைக்காயில் தயிர் 2 ஸ்பூன், மசாலா பொடி ( மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு, சீரகத்தூள்) கலந்த கலவையை உள்ளே பூசி தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி வறுத்துக் கொள்ளவும்,

4) கேரட் அல்வா - சர்க்கரை, பாதாம், சேர்க்காமல் 2 கேரட்டை துருவி வதக்கி நன்கு வெந்தப்பிறகு நெய் 1 ஸ்பூன் ஊற்றி சுருண்டு வரும்போது ஏலக்காய்த் தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

5) மஷ்ரூம் சூப் - மஷ்ரூம் வெண்ணெய்யில் வதக்கி வேகவைத்து அரைத்து இன்னொரு வாணலியில் பட்டை, நறுக்கிய பூண்டு, வெண்ணெய் வதக்கி அரைத்த விழுதை தண்ணீருடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விட்டு தேங்காய் பால், மிளகுத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

No comments:

Post a Comment