Thursday, 22 December 2016

அதிகமானா என்ன செய்ய???

* சாம்பார், வற்றல் குழம்பு ஆகியவற்றில் காரம் அதிகமாகி விட்டால், நல்லெண்ணெயை ஊற்றி கொஞ்சம் கொதிக்க விடுங்கள். காரம் குறைந்து விடும், குழம்பின் வாசனையும் நன்றாக இருக்கும்.
* குருமா போன்ற கிரேவியான ஐட்டங்களில் காரம் கூடினால், ஒரு ஸ்பூன் வெண்ணெய் போட்டு கொதிக்க வையுங்கள். காரம் குறைந்துவிடும்.
* குழம்பில் புளி அதிகமாகி விட்டால், சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை உடனே சரியாகி விடும்.
* ரோஸ்ட் செய்யும் கறிகளில், எண்ணெய் அதிகமாகிவிட்டால், கறிகளின் மேல் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை தூவினால், கறியின் எண்ணெயை அரிசிமாவு உறிஞ்சிக் கொண்டு விடும்; கறியும் மொறு மொறுப்பாக இருக்கும். கடலை மாவும் தூவலாம். ஆனால், கடலை மாவு சுவையை கூட்டினாலும் கறிகளுக்கு மொறுமொறுப்பை தராது.
* குழம்பில் உப்பு அதிகமானால், ரெண்டு துண்டு உருளைக் கிழங்கை வெட்டிப் போட்டு கொதிக்க விடுங்கள். உப்பை அப்படியே உறிஞ்சிக் கொள்ளும்.
* சப்பாத்தி நிறைய மீதியாகி போச்சா. மொட்டை மாடில கொண்டு போயி அதை காய வைங்க. அது காஞ்சு உடையற மாதிரி ஆனவுடன் எண்ணெய்ல பொரிச்சு சாப்பிட்டு பாருங்க...

No comments:

Post a Comment