Monday 1 August 2016

PULIMA

பச்சரிசி மாவு - 1 டம்ளர்
புளி - எலுமிச்சை அளவில்
உப்பு - ருசிக்கு ஏற்ப
தூள் பெருங்காயம் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் வற்றல் - 2 அல்லது 3
கருவேப்பிலை - 10 தழை.

*செய்முறை*:
புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவில் புளி கரைசலை விட்டு மஞ்சள் பொடி, உப்பு கலந்து பிசறின மாதிரி வைக்கவும்.

ரொம்பவும் கெட்டியாகவும் இல்லாமல் ,நெகிழமாகவும் இல்லாமல் இருக்கணும்.

10 நிமிஷம் ஊறிய பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலையுடன் தாளித்துக் கொள்ளவும்.

பின்னர் ஊற வைத்த மாவையும் வாணலியில் சேர்த்து மொறுமொறு என்று வதக்கிக் கொண்டே .............. ((!!!!)) இருக்கவும்.

15 நிமிஷத்தில் டிபன் ரெடி!!!

குறிப்பு : பச்சரிசிக்கு பதிலாக புழுங்கல் அரிசியை ஊற வைத்து அரைத்தும் செய்யலாம் .













No comments:

Post a Comment